'இப்டியா நடக்கணும்..'.. ரயில் நிலையத்தையே நடுங்க வைத்த காட்சி.. உருகவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 21, 2019 06:30 PM

ராஜஸ்தானில் நின்றுகொண்டிருந்த ரயில் முன்பு தண்டவாளத்தைக் கடந்து, பெண்மணி ஒருவர் நடந்து சென்றபோது ரயில் நகரத் தொடங்கியதால் அந்த ரயில் நிலையமே பரபரப்பாகியுள்ளது.

woman got a great escape after goods train passed over her

ராஜஸ்தானில் உள்ள நீம் கா தனா ரயில் நிலையத்தில் கூட்ஸ் ரயில் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த வழியே 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் ரயிலின் முன்பக்கமாக தண்டவாளத்தைக் கடந்து செல்ல எத்தனித்துள்ளார். ஆனால் ரயில் எதிர்பாராத விதமாக நகரத் தொடங்கியது.

உடனே, கடந்துவிட முயற்சித்த மாலிதேவி என்கிற இந்த பெண்மணியின் கால்கள் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டதும், வேறு வழியின்றி ரயில் தண்டவாளத்தோடு ஒட்டி,  தன்னை சுருக்கிக் கொண்டு படுத்துள்ளார். ரயில் முழுவதுமாக தன்னைக் கடந்து சென்ற பின்னரே அவர் சிறு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக எழுந்து வந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இதேபோல் கடந்த வருடம் உத்திர பிரதேசத்தின் மதுரா என்கிற இடத்தில், பெண்மணி ஒருவர் தனது ஒரு வயது குழந்தையைத் தவறவிட்டதை அடுத்து, குழந்தை தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. உடனடியாக பதற்றத்தில் இறங்கி காப்பாற்ற முயன்ற  பலரும் ரயில் வந்ததால் பயந்து ஒதுங்கிவிட்டனர்.

ஆனால் ரயில் முழுவதுமாக குழந்தையைக் கடந்த பிறகும் கூட, குழந்தைக்கு ஒரு சிறு கீறல் கூட நேராமல் தப்பித்தது பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #RAJASTHAN #TRAIN