'மீசை'.. ஸ்டைலைத் தொடர்ந்து இதுவும் வந்தாச்சு.. 'அபிநந்தனாகவே' மாறி ரவுண்டு கட்டலாம்.. வைரல் ஆப்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 31, 2019 07:55 PM

தினமும் புதுப்புது ஆண்ராய்டு கேம்கள் அறிமுகமாகியபடி இருக்கின்றன. குழந்தைகள் அல்லது மாணவப்பருவத்தினரைப் பொருத்தவரை, ஒவ்வொரு சீசனிலும் வரும் புதிய கேம்களின் எல்லா விதமான லெவல்களையும் கடந்து வெற்றி பெறவே நினைக்கின்றனர்.

IAF gives the chances to be abhinandan and fight in game

அவர்களுக்கு உற்சாகத்தைத் தருமாறும், அதே சமயம் இந்திய ராணுவத்துக்காக பாகிஸ்தான் வரை சென்று சிறைபிடிக்கப்பட்டு இந்தியா மட்டுமல்லாது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த நாழிகைகள்தான், அபிநந்தனின் விடுதலை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாகச் சொன்ன அந்த கணம் இந்தியா முழுவதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் மேலோங்கியது.

மீண்டும் அபிநந்தன் இந்தியாவின் செல்லப்பிள்ளையாகவும், பெரும் பாதுகாவலராகவும் அழைத்துவரப்பட்டார். அவரின் பெற்றோர் சென்னையில் இருப்பவர்கள் என்றதும் இன்னும் தமிழ்நாட்டில் அதிகமாகவே அபிநந்தன் நெருக்கமானார். பெங்களூருவில் அபிநந்தனின் மீசை பிரபலமானது. இந்த நிலையில், தற்போது அபிநந்தனாகவே மாறி போர் விமானியாக விளையாடும் வாய்ப்பினை அளிக்கும் விளையாட்டு ஆப் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு கார்டியன்ஸ் ஆஃப் ஸ்கைஸ் என்கிற பெயரில் வெளிவந்த கேம்-ஆப் பிரபலமாகியதைப் போலவே 10 லெவல்கள் கொண்ட இந்த விளையாட்டு ஆப்பினையும் இந்திய விமானப் படையின் வேண்டுகோளின் பேரில் டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Tags : #ARMY #GAME #ABHINANDAN #IAF #APP