"இப்போதான் பளிச்சுன்னு தெரியுது..." இவ்ளோ நாள் 'பனி மூட்டம்னு' நினைச்சது 'தப்பு'... '200 கிலோமீட்டருக்கு' அப்பால் காணக்கிடைக்கும் 'எவரெஸ்ட்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 18, 2020 05:16 PM

ஊரடங்கால் காற்று மாசு கணிசமாக குறைந்ததைத் தாடர்ந்து 200 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை காத்மண்டு மக்கள் வீட்டில் இருந்தே கண்டு ரசித்து வருகின்றனர்.

Kathmandu people who have seen Everest at home

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் நேபாளம் வழியாக செல்லும் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது.  நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து இந்த மலைச்சிகரம் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பல ஆண்டுகளாக இந்த சிகரம் காற்று மாசுபாட்டால் கண்களுக்குத் தெரியாமல் இருந்து வந்தது. தற்போது 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் காற்று மாசு வெகுவாக குறைந்ததையடுத்து, 200 கிலோமீட்டருக்கு அப்பால் தலைநகரிலிருந்தே எவரெஸ்ட் சிகரத்தை தெளிவாக காணமுடிகிறது. இந்த அரிய காட்சி பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் காணக்கிடைக்கிறது.

இந்த காட்சியை வெளியிட்டுள்ள நேபாளி டைம்ஸ் பத்திரிகை, ஊரடங்கால் நேபாளம் மற்றும் வட இந்தியாவில் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளதே இந்த தெளிவான காட்சிக்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளது.