'குர்தா 800 ரூபாதானா?'.. ஆர்டர் செய்ததும் 'அம்பேல்' ஆன 80,000 ரூபாய்!.. அதிர்ந்துபோன இளம் பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 26, 2019 06:23 PM

பெங்களூருவில் இளம் பெண் ஒருவர் 800 ரூபாய்க்கு ஆன்லைனில் குர்தா ஆர்டர் செய்யப் போய், 80 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்களிடம் பறிகொடுத்த அவலம் நிகழ்ந்தேறியுள்ளது.

woman ordered kurta for 800rs and lost 80000 rs to fraudsters

ஆம், பெங்களூருவைச் சேர்ந்த ஷ்ரவனா என்கிற பெண் இணையத்தில் இ-காமர்ஸ் என்கிற ஆப்பினை டவுன்லோடு செய்துள்ளார்.  அதில் தனக்கு விருப்பமான குர்தா ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். அதற்காக 800 ரூபாய் பணமும் செலுத்தியிருக்கிறார். ஆனால் அந்த பணம்தான் தனது அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆனதே தவிர, குர்தா ஆர்டர் செய்ததற்கான தகவல் எதுவுமே வரவில்லை.

இதனையடுத்து செயலியில் கொடுக்கப்பட்டிருந்த போன் நம்பருக்கு போன் செய்து ஷ்ரவனா கேட்டுள்ளார். அப்போது, எதிர்முனையில் பேசிய அந்த மர்ம நபர், ஷ்ரவனாவுக்கு உதவி செய்வது போல், நேர்மையாக பேசி, ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வங்கி விபரங்களை கேட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணும் வெகுளியாக எல்லாவற்றையும் கூற, அந்த நபரோ, அப்பெண்ணின் போனுக்கு ஒரு ஓடிபி வந்துள்ளதாகவும் அதை அப்படியே சொல்லுமாறும் கேட்டுள்ளார்.

அவரை நம்பி ஓடிபி நம்பரை கொடுத்துள்ளார் அந்த பெண். அவ்வளவுதான் உடனே அந்த பெண்ணின் கணக்கில் இருந்து 79 ஆயிரத்து 600 ரூபாய் காணாமல் போனது. பதறி அடித்துக்கொண்டு அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதோடு, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டும் செயலிகளை டவுன்லோடு செய்யுங்கள் என்றும், போனில் இருக்கும் play protect ஆப்ஷனை Enable செய்யுங்கள் என்றும் பொடுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : #SHOPPING #ONLINE #FRAUDSTER