‘இதை எல்லாம் ஃபர்ஸ்ட் ஸ்டாப் பண்ணுங்க’.. ‘ஜொமேட்டோ, ஸ்விகி நிறுவனங்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 27, 2019 01:44 PM
சலுகைகள் வழங்குவதை நிறுத்த வேண்டுமென ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு தேசிய உணவக ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமென ஜொமேட்டோ, ஸ்விகி, ஊபர் ஈட்ஸ், ஃபுட் பாண்டா போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு தேசிய உணவக ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளால் தங்களுக்கு கமிஷன் பிரச்சனை மற்றும் அழுத்தம் ஏற்படுவதாக உணவக நிர்வாகிகள் தரப்பிலிருந்து தங்களுக்கு புகார் வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், “அவ்வப்போது ஏதேனும் விழாக் காலங்களில் சலுகைகள், தள்ளுபடிகள் வழங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வருடம் முழுவதும் 30 முதல் 70 சதவிகிதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் எனக் கூறுவதில் நியாயமில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள தேசிய உணவு ஆணைய தலைவர் அனுராக் கட்ரியார், “தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் எதிராக நாங்கள் செயல்படவில்லை. ஆனால் அதைப் பயன்படுத்தி தேவையில்லாத ஆதிக்கம் செலுத்தப்படுவதாலேயே நாங்கள் இதில் தலையிடுகிறோம்” எனக் கூறியுள்ளார்.