கண்ணெதிரே உயிருக்கு 'போராடிய' மனைவி... தப்பியோடி 'தலைமறைவான' கணவர்... செங்குன்றம் அருகே பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை கொலை செய்து தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம் அருகேயுள்ள ஆட்டாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன்(32) இவரது மனைவி அஞ்சம்மாள்(28) இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதற்கிடையில் அஞ்சம்மாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த துளசிராமன் கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவி அஞ்சம்மாளிடம் பலமுறை கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஆனால் அஞ்சம்மாள் இதற்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது. நேற்று காலை இதுதொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் துளசிராமன் சுத்தியலை எடுத்து அஞ்சம்மாள் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் மயங்கி விழுந்த அஞ்சம்மாள் உயிருக்கு போராட இதைக்கண்ட துளசிராமன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். தொடர்ந்து குழந்தைகளின் சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் அஞ்சம்மாளை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அஞ்சம்மாள் இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துளசிராமனை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
