'அடுத்த 2 நாள் பத்திரமா இருந்துக்கோங்க'... வானிலை மையம் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jun 12, 2019 04:19 PM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய 10 நகரங்களிலும் அடுத்த இரண்டு நாட்கள் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக இருக்கும் வெப்பநிலையை விட 2-3 செல்சியசுக்கு அதிகமான வெப்பநிலை நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருக்கும். எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், கன மழை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.