'அப்பாடா, நமக்கும் வாய்ப்பு இருக்கு!'... வானிலை மையம் புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 14, 2019 12:30 PM

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chances are there to getting rain for 2 days in chennai

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் இதர மாவட்டங்களில் வறட்சியே நீடிக்கிறது. வெயிலின் தாக்கத்தாலும், மழையின்மையாலும் தலைநகர் சென்னை, தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டதால், மழையை நம்பியே சென்னைவாசிகள் உள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் வெள்ளிக்கிழமையன்று அனல் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை, வெப்பச்சலனம் காரணமாக 15-ந்தேதி மற்றும் 16-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 15-ந்தேதிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். தென்மேற்கு பருவமழை காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் நிலவும். இதனிடையே, வால்பாறை, குளச்சலில் தலா 2 செ.மீ. மழையும், பேச்சிப்பாறை, குழித்துறை, பெரியாறு, செங்கோட்டையில் தலா 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.

Tags : #RAIN #CHENNAI