இப்போ தானே 'ஸ்டார்ட்' பண்ணோம் அதுக்குள்ள இப்படியா?... அரசு பேருந்து கண்ணாடியை 'கல்வீசி' நொறுக்கிய பெண்... பயணிகள் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு பேருந்து கண்ணாடியை பெண் ஒருவர் கல்வீசி உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சுமார் 67 நாட்களுக்கு பின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் 50% அரசு பேருந்துகள் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.
பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து செல்லும்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கல் ஒன்றை வீச, இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பேருந்தை அங்கிருந்து அகற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் வேறு பேருந்துக்கு மாற்றி விடப்பட்டனர்.
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் நீண்ட நாட்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அவரை மனநல காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.