கொரோனா பாதிப்பில் ... ஸ்பெயின், இத்தாலிக்கு அடுத்த 'இடத்தை' பிடித்த இந்தியா... ஆனாலும் ஒரு 'நல்ல' செய்தி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு 5-வது கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சற்றே வேகமெடுக்க ஆரம்பித்து இருக்கின்றன. நாட்டில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,90,535 ஆகும். சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின் படி 93,322 செயலில் உள்ள பாதிப்புகள் மற்றும் 91819 பேர் குணமாகி உள்ளனர். 5394 இறப்புகள் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 7-வது நாடாக இந்தியா மாறியுள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும் 2-வது இடத்தில் பிரேசிலும், 3-வது இடத்தில் ரஷியாவும் உள்ளன. 4 -வது மற்றும் 5-வது இடங்களை இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளும் 6-வது இடத்தை இத்தாலி நாடும் பிடித்துள்ளன.
எனினும் இறப்பு விகிதம் மற்றும் குணமடைவோர் சதவிகிதம் இந்தியாவில் அதிகம் இருப்பது சற்றே ஆறுதலான விஷயமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக இருப்பதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
