கல்யாணம் ஆகி ரெண்டே வருஷத்துல.. குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய இளம் பெண்ணின் விபரீத முடிவு..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பனந்தாள் அருகே அமைந்துள்ள சோழபுரம் சின்ன அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சோனாலி (வயது 23).

இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், பி.எஸ்சி இரண்டாம் படித்து வந்துள்ளார்.
காதல் திருமணம்
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சக்திதாஸ் என்பவரை காதலித்துள்ளார் சோனாலி. காதல் பறவையாக சுற்றி வந்த இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர். தொடர்ந்து, இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
குடும்ப தகராறு
மேலும், சக்திதாஸ் தற்போது சோழபுரம் பகுதியில் குடிதண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இதனிடையே, கணவன் - மனைவியான சக்திதாஸ் மற்றும் சோனாலி ஆகியோருக்கு இடையே, குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், கணவரிடையே நடைபெற்ற கருத்து வேறுபாடு காரணமாக, தனது தாய் வீட்டிற்கும் சோனாலி சென்றுள்ளார்.
விபரீத முடிவு
அங்கு அவருக்கு ஆறுதல் கூறி உறவினர்கள் தேற்றி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, சோனாலி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட சோனாலியின் உறவினர்கள், கதறித் துடித்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் எடுத்த விபரீத முடிவு, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்குப் பதிவு செய்து விசாரணை
தொடர்ந்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சோனாலியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு வேண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆன 2 வருடத்தில், இளம்பெண் எடுத்துள்ள இந்த விபரீத முடிவும், இந்த முடிவால், சுமார் ஒன்றரை வயது பெண் குழந்தை, தாயை இழந்து நிற்கும் அவல நிலையும், அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
