'மனைவியைக் காப்பாற்ற நடந்த சண்டை'... 'ஆனா மனுஷன் கூட இல்ல'... 'உயிரைப் பணயம் வைத்த கணவன்'... பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Aug 17, 2020 04:43 PM

எனக்காக எதையும் செய்வீர்களா என்ற கேள்வியைப் பல மனைவிமார்கள் கேட்கும் போது, உனக்காக எதையும் செய்வேன் எனக் கணவன்மார்கள் கூறுவது வழக்கம். அந்த வகையில் மனைவிக்காகத் தனது உயிரையே கணவன் ஒருவர் பணயம் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man jumped onto a great white shark and punched it to save his wife

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதிகள் தான் சாண்டெல்லே டாய்ல், ஷெல்லி. இந்த தம்பதியினர் நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரையில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தனர்.  அப்போது எதிர்பாராத விதமாக,  2 முதல் 3 மீட்டர் அளவுள்ள சுறாவால் டாய்ல் தாக்கப்பட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத அவர் கதறித்  துடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷெல்லி, உடனே சுறா மீது குதித்து அதனைக் குத்தி மனைவியைச் சுறாவிடம் இருந்து காப்பாற்றினார்.

உடனே மருத்துவக்குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் டாய்லுக்கு  முதலுதவி அளித்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். டாய்லுக்கு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்குப் பிறகு போர்ட் மேக்வாரி பகுதியில் உள்ள கடற்கரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனைவியைக் காப்பாற்றியது குறித்துப் பேசிய ஷெல்லி, ''என் மனைவி தான் எனக்கும் எல்லாம். அவளைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வேன்'' எனக் கூறினார். தனது உயிரைப் பணயம் வைத்து சுறாவைத் தாக்கி மனைவியை மீட்ட ஷெல்லிக்கு  பாராட்டு குவிந்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man jumped onto a great white shark and punched it to save his wife | World News.