'இது சும்மா ட்ரைலர் தான்'...'மழை இருக்கானு கேக்காதீங்க'... 'வெதர்மேன்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 30, 2019 04:17 PM

சென்னை மக்கள் மிகுந்த ஆர்வமுடன் மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.இது சென்னை மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மே மாதம் தொடங்கும் முன்பே கடந்த மாதமே சென்னையில் தண்ணீர் பிரச்னை ஆரம்பித்து விட்டது.

chennai will experience heavy heatwave in coming days

இந்நிலையில் ஃபோனி புயலால் சென்னைக்கு கடுமையான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் தற்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஃபோனி புயலானது தமிழகத்தை நெருங்காமல் வடக்கு நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி ஒடிசா அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் ஏற்கனவே இருக்கும் ஈரப்பதத்தையும் கடற்காற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி நகர்கிறது.இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட இருக்கிறது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் வெளியிட்டுள்ள பதிவில் ''ஃபோனி புயலால் சென்னைக்கு எந்த பயனும் இல்லை.சென்னை முதன்முதலாக 40 டிகிரி செல்சியல் வெப்பத்தை தொட்டுள்ளது.ஆனால் இது வெறும் டிரைலர் தான். இந்த வாரத்தின் இறுதியில் இன்னும் அதிகமாக இருக்கும்.

இன்றும் நாளையும் மேகமூட்டம் இருக்கலாம். ஆனால் ஃபோனி வடக்கு நோக்கி நகர்ந்துவிட்டால் சென்னை வெப்பக்காற்றில் சிக்கும். சென்னை மட்டுமல்லாமல் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும்'' என தெரிவித்துள்ளார்.

Tags : #TAMIL NADU WEATHERMAN #CHENNAI #HEATWAVE