‘நானும் அவர மாதிரி விக்கெட் கீப்பர், கேப்டன் ஆகணும்’.. ‘தல’ பேரில் தெருவின் பெயர்.. மாஸ் காட்டி வைரலான சென்னையின் முக்கிய நகரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 21, 2019 05:19 PM

சென்னையின் குடியிருப்பு பகுதிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெயரை வைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

IPL 2019: In Chennai, street named after MS Dhoni

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடந்த ஐபிஎல் டி20 தொடரில் மூன்று முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் டி20 லீக்கின் 12 வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோலகலமாக நடந்து வருகிறது.

சென்னை அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 -ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதனை அடுத்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இன்றைய(21.04.20190 போட்டியில் சென்னை அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர் கொள்கிறது. இதற்கு முன் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் ராயல் சேல்ஞ்சர்ஸ் அணியை சென்னை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பூந்தமல்லி என்ற நகரின் ஒரு குடியிருப்பு பகுதிக்கு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பெயரை வைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #YELLOVE #WHISTLEPODU #CHENNAI