சட்டென்று மாறிய வானிலை அறிக்கை.. ‘வந்த வேகத்தில் யூ டர்ன் அடிக்கிறதா ஃபானி புயல்?’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | Apr 28, 2019 11:12 AM

ஃபானி புயல் சென்‌னையை நெ‌ரு‌ங்காது என்று சென்னை வானிலை ‌ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

no strom attack for chennai by this new pani cyclone.

தென்கி‌ழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபானி புயல் மேலும் வலுப்பெற்று மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 1200 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும், இன்று அது தீவிர புயலாகவும், அதன் பின்னர் அதிதீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 30 ம் தேதி இந்த புயல் வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாகவும் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வட கிழக்கு திசையில் திரும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைய நிலவரத்தின்படி வட தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து சுமார் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே புயல் வரக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு என்றும் கூறியுள்ளது.

இந்த புயலால் வட தமிழகப் பகுதிகளில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : #PANI CYCLONE #CHENNAI #SAFEGUARD