என்னால 'யாரு' மனசும் 'புண்பட' கூடாது...! 'வாக்குச்சீட்டை பிரிச்சு பார்த்தப்போ மிரண்டுட்டாங்க...' - உங்க 'நல்ல மனசு' யாருக்கும் வராது சாமி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் வடிவேலு படக் காமெடி போன்ற ஒரு சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
அதன் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்படும் நிலையில் வாக்கு சாவடிகளுக்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஅமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் 16-ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு சீட்டுகள் எண்ணிக்கொண்டிருந்த போது வடிவேலு காமெடி போல் ஒன்று நடந்துள்ளது.
ஒரு படத்தில் தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வரும் நபரை வடிவேலு பார்த்து 'யாருக்கு ஒட்டு போட்ட?' என கேட்பார். அந்த நடிகரோ உனக்கு தான்னே ஒட்டு போட்டேன் என சொல்வார்.
அதேபோல் சிறிது தூரம் சென்ற பின் வேறொரு கட்சி காரர் யருக்கு ஒட்டு போட்ட என கேட்கும் போதும் உனக்கு தானே போட்டேன் என்பார். அவரோ 'அவனுக்கு போட்டன்னு சொல்ற என்கிட்ட வந்து எனக்கு போட்டன்னு சொல்ற' என்பார். உடனே அந்த வாக்காளர் 'உன்கிட்ட வாங்குன காசுக்கு உனக்கு ஒரு குத்து, அவன்ட்ட வாங்குன காசுக்கு அவனுக்கு குத்து' என்பார்.
அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்து அவரை பார்க்க அவரோ 'சொன்ன நம்ப மாட்டிங்கனு தான் வருஷா வருஷம் இப்படி கொண்டு வருவேன்' என கூறுவார். இந்த காட்சியை பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இல்லை.
அதேபோன்று கானை ஒன்றியத்திலும் வாக்களித்த ஒருவர் எந்த கட்சி காரர் மனதும் புண்படாமல் இருக்க வேண்டும் என அனைத்து சின்னத்திலும் தன் ஓட்டை குத்தியுள்ளார். இந்த வாக்கு சீட்டு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
