திராவிட கட்சிகளுக்கு ‘டஃப்’ கொடுக்கும் ஹரி நாடார்.. பரபரக்கும் ஆலங்குளம் தொகுதி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டுள்ள ஹரி நாடார் திராவிட கட்சிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் வாக்குகளை பெற்றுள்ளார்.

பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் ஹரி நாடார் போட்டியிட்டுள்ளார். பெரிய அரசியல் கட்சிகளுக்கு இணையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தனது கட்சியின் சார்பாக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டரில் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் ஹரி நாடார் இருந்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் பவுல் மனோஜ் பாண்டியன் 17,989 வாக்குகளும், திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 16,691 வாக்குகளும், பனக்காட்டுப்படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் 16,825 வாக்குகளும் பெற்றுள்ளார்.

மற்ற செய்திகள்
