'எதிரியின் இடத்துக்கே சென்று மாஸ் சம்பவம்'!.. சவாலை ஏற்று... சாதித்து காட்டிய மம்தா!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா நூலிழையில் வெற்றி பெற்றுள்ளார்.
![west bengal elections 2021 mamata banerjee wins nandigram west bengal elections 2021 mamata banerjee wins nandigram](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/west-bengal-elections-2021-mamata-banerjee-wins-nandigram.jpg)
பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரியை விட 1,200 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். காலையில் இருந்து மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார் மம்தா பானர்ஜி.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவின் வலது கரமாக விளங்கியவர் சுவேந்து அதிகாரி. உட்கட்சி பூசலால் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி, அவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிடட்டும் என சுவேந்து அதிகாரி சவால் விடுத்தார். இதனால் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விடுத்து நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டார் மம்தா.
இந்நிலையில் தான், மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியை தோற்கடித்துள்ளார். மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி 212 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜக 78 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)