'லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி!.. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு'!.. பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இவரின் பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் நட்சத்திர வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான எண்ணிக்கை வித்தியாசத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இவர் திமுகவின் முன்னணி தலைவர்களுள் முக்கியமானவர் ஆவார். முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இதன் மூலம், இந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமை ஐ.பெரியசாமிக்கு கிடைத்துள்ளது.
இவருக்கு அடுத்தடுபடியாக திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட ஏ.வ.வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மற்ற செய்திகள்
