'20 ஆண்டுகள் கழித்து... தமிழக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கிறது பாஜக'!.. முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல வருடங்கள் கழித்து தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றிப்பெற்றார்.
தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முன்னதாக கோவைத்தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும், நாகர்கோயில் தொகுதியில் எம்.ஆர்.காந்தியும் வெற்றிபெற்ற நிலையில் தற்போது திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றிபெற்றுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் நிலையில் இழுபறி நீடிக்கிறது. மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. 250 வாக்குகள் பாஜக முன்னலை வகித்துவருகிறது. எனினும், முடிவை அறிவிக்க திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 3வது முறையாக தபால் வாக்குகளை எண்ணும் பணி நடந்துவருகிறது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனுக்கு எதிராக போட்டியிட்ட நடிகை குஷ்பு பெரும் பின்னடைவை சந்தித்து தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.