'முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக...' எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா...? - 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 02, 2021 02:52 PM

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை தொகுதிக்கு முதல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

AIADMK candidate Kandasamy wins in Valparai constituency

கோவை மண்டலத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் 53,309 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

முதல் சுற்று முதலே முன்னிலை வகித்து வந்த அமுல் கந்தசாமி  66,474 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிகவின் எம்.எஸ்.செல்வராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில் ராஜ், நாம் தமிழர் கட்சியின் கோகிலா ஆகியோர் குறைந்த வாக்குகளையே பெற்றனர். இதன்மூலம் 12,365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

AIADMK candidate Kandasamy wins in Valparai constituency

இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. AIADMK candidate Kandasamy wins in Valparai constituency | Tamil Nadu News.