‘அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்கள்’!.. இந்த தேர்தலில் இத்தனை பேர் தோல்வியா.. வெளியான விவரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பெற்ற அதிமுக அமைச்சர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்கு நேற்று எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி 157 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் அதிமுக கட்சி 77 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் பலர் இந்த தேர்தலில் தோல்வியடைந்தது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார், ஆவடியில் போட்டியிட்ட க.பாண்டியராஜன், மதுரவாயலில் போட்டியிட்ட பென்ஜமின், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட சி.வி.சண்முகம் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடலூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.சி.சம்பத், சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட ராஜலட்சுமி, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஜோலார்பேட்டையில் போட்டியிட்ட கே.சி.வீரமணி, ராசிபுரத்தில் போட்டியிட்ட சரோஜா மற்றும் கரூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.