'நாங்க எங்க தோல்வியை ஏற்று கொள்கிறோம்'... 'ஏன் அப்படி சொன்னார்'... வைரலாகும் திமுக எம்.பியின் ட்வீட் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் பதிவிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தர்மபுரியில் உள்ள பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பழகன் முன்னிலை பெற்றுள்ளார். பென்னாகரம் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி, தர்மபுரியில் பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேசன், பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி, அரூர் (தனித்தொகுதி)-யில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.
தர்மபுரியில் உள்ள 5 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகத் தர்மபுரி திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார் ட்விட்டரில் கூறினார். அவருடைய ட்விட்டர் பதிவில், ''தர்மபுரியில் 5 தொகுதிகளிலும் கணிசமான வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளோம், முன்னணியில் உள்ள 3 அதிமுக மற்றும் 2 பாமக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம், இன்னும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது, கடுமையாகப் பாடுபடுவதோடு, தர்மபுரியில் புதுமையான மாற்றங்களையும் காணலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் 5 தொகுதிகளிலும் கணிசமான வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளோம்
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) May 2, 2021
முன்னணியி உள்ள 3 அதிமுக மற்றும் 2பாமக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்🎉
தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம்
இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது
கடுமையாக பாடுபடுவதோடு,
தர்மபுரியில் புதுமையான மாற்றங்களையும் காணலாம்