'மோடியை வீழ்த்த வியூகம்!.. 15 எதிர்க்கட்சிகள் இணைந்த மாபெரும் அணி'!?.. அவசர அவசரமாக மீட்டிங் ஏற்பாடு செய்த சரத் பவார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jun 22, 2021 08:45 PM

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் பணியில் இறங்கியுள்ள தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பல முக்கியக் கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ncp chief shard pawar executive meeting opposition elections

மேற்கு வங்காளத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின், தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் அளித்த யோசனைப்படி, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ராஷ்டிரா மஞ்ச் என்ற ஐக்கிய எதிர்க்கட்சிகள் அமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரசியலில் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திப்பதும், இந்தக் கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமையேற்பதுமே தற்போதைய திட்டம்.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கு முன்பு, பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த யஷ்வந்த் சின்ஹா 2018-ஆம் ஆண்டு உருவாக்கிய கோஷமே 'ராஷ்டிரா மஞ்ச்' எனப்படும் ஐக்கிய எதிர்க்கட்சிகள் அமைப்பாகும்.

அந்த வகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்க, காங்கிரஸ் அல்லாத 15 எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, மாற்றுசக்தியை உருவாக்குவது என்பதே பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்திருக்கும் திட்டம்.

சரத் பவார் - பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு  எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளின் கூட்டம் இன்று சரத்பவார் இல்லத்தில் நடைபெறுகிறது. பாஜகவுக்கு  எதிராக அணிசேரும் 15 எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளன.

பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ராஷ்டிரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி, தேசிய மாநாட்டுத் தலைவர் ஒமர் அப்துல்லா, முன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சன் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா, பாஜகவில் இருந்து விலகிய சுதீந்திர குல்கர்னி, சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கன்ஷ்யாம் திவாரி உள்ளிட்டத் தலைவர்கள்  கூட்டத்தில் கலந்து கொள்ள வந்து உள்ளனர்.

ஆனால், இதுகுறித்து சரத் பவார் கூறியதாவது, மூன்றாவது முன்னணி கூட்டத்தை நாங்கள் நடத்தவில்லை என கூறினார்.

சிவசேனாவின் சஞ்சய் ரவுத் கூறியதாவது, "இது சிவசேனா, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லாததால் இது ஒரு எதிர்க்கட்சி கூட்டம் என்று நான் நம்பவில்லை. எதிர்க்கட்சியை ஒன்றிணைக்கும் முதல் முயற்சி இதுவாக இருக்கலாம்" எனக் கூறினார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ncp chief shard pawar executive meeting opposition elections | India News.