“தியேட்டரா என்னா இது?.”.. பார்வையாளர்களின் மோசமான செயலால் பரபரப்பு.. போலீஸ் அதிகாரி கொடுத்த வார்னிங்! வீடியோ

முகப்பு > செய்திகள் > உலகம்

By K Sivasankar | Jan 14, 2023 05:57 PM

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் வெளியாகியுள்ளது.

USA fans throwing papers Veera Simha Reddy show stopped in Mid

ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனி ரோஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையைமத்துள்ள நிலையில் இந்த சங்கராந்திக்கு டோலிவுட்டில் இப்படம் ரிலீசானது. உலகம் முழுவதும் இந்தப் படத்தை மக்கள் பார்த்து கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

அதன்படி, அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த திரையரங்கு ஒன்றில் இப்படம் ஓடும்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் அதகளம் செய்ததால்  படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.  விசில் பறக்க காகிதங்களைக் கிழித்து பார்வையாளர்கள் சிலர் பறக்கவிட்டு தியேட்டரே மோசமாகி நாசமானது.

USA fans throwing papers Veera Simha Reddy show stopped in Mid

இதனால் கடுப்பான தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளூர் காவல் துறையினரை வரவழைத்தனர். அத்துடன், “இதென்ன தியேட்டரா என்ன இது? இதுவரை எத்தனையோ படங்கள் திரையிடப்பட்டன. ஆனால் இங்கு இதுபோன்று ஒரு மோசமான சம்பவம் நடந்ததே இல்லை” என திரையரங்கம் & காவல் துறை தரப்பில் ரசிகர்களுடன் வருத்தமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

USA fans throwing papers Veera Simha Reddy show stopped in Mid

இதேபோல் ஆந்திராவில் வீர சிம்ஹா ரெட்டி படம ஓடிக்கொண்டிருக்கும்போது ஸ்கீரின் திடீரென பற்றி எரியக்கூடிய காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சங்கராந்தி ஸ்பெஷல் டோலிவுட் ரிலீஸ் ரேஸில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் முன்னணி நடிகர் ரவி தேஜா இணைந்து நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படம் ஜனவரி 13ஆம் தேதியும், வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங்கான வாரசுடு படம் ஜனவரி 14ஆம் தேதியும் ரிலீசாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #NANDAMURI BALAKRISHNA #VEERA SIMHA REDDY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. USA fans throwing papers Veera Simha Reddy show stopped in Mid | World News.