CHELLAMMA : “அவள மொதல்ல விரட்டிவிடுங்க.. செல்லம்மாவ கல்யாணம் பண்ணுங்க”.. அர்ணவிடம் சொல்லும் ரசிகைகள்.. வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் செல்லம்மா. இந்த சீரியலில் நாயகன் சித்து கேரக்டரில் அர்ணவ் நடிக்கிறார்.ன் நாயகி செல்லம்மா கேரக்டரில் அன்ஷிதா நடிக்கிறார்.

Also Read | அதிர்ச்சி! ஒரு மாதத்தில் திருமணம்.. சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!!
இந்த சீரியலில் செல்லம்மாவை ஒரு தலையாக சித்து காதலிக்க, இதனிடையே அவருக்கும் அவரது மாமன் மகளான மேகாவிற்கும் திருமண செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனாலும் நாயகன் சித்து, செல்லம்மாவை தான், தான் திருமணம் செய்து கொள்ள போவதாக ஆணித்தரமாகவும் உறுதியாகவும் இருந்து வந்தார். இந்த சீரியலில் மேகா கேரக்டரில் நடித்துவந்த நடிகை திவ்யா கணேஷ் தற்போது விலகியுள்ளார். அவருக்கு பதில் இந்த சீரியலில், மேகா கேரகடரில் நடிகை ஸ்ரேயா நடிக்கத் தொடங்கியுள்ளார். சீரியல் நடிகை ஸ்ரேயா தற்போது மேகா கேரக்டரில் நடிக்க கூடிய எபிசோடுகள் தற்போது வரத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில்தான், சித்து - மேகா இருவருக்குமான திருமண ஏற்பாடுகள் இந்த சீரியலில் மும்மரமாக நடக்கிறது. கிட்டத்தட்ட இந்த சீரியலின் விறுவிறுப்பான கட்டம் இது என்பதால், இந்த சீரியலின் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த சீரியல் தற்போது மிகவும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியின் பல சீரியல்களை போலவே, செல்லம்மா சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
இதனிடையே அண்மையில் நடந்த இந்த சீரியலின் படப்பிடிப்பு நடுவே, அர்ணவை சந்தித்த செல்லம்மா சீரியலின் ரசிகர்கள், சித்து கேரக்டர் சீக்கிரம் செல்லம்மாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக மேகாவை வீட்டை விட்டு சீக்கிரம் வெளியே அனுப்ப கோரியுள்ளனர். அத்துடன் தனிப்பட்ட முறையில் நடிகர் அர்ணவைடும் ஒட்டுமொத்த சீரியல் நடிகர்களையும் பாராட்டியுள்ளனர்.
இந்த நெகிழ்ச்சி வீடியோவை நடிகரும் இந்த சீரியலின் ஹீரோவுமான அர்ணவ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்
