“கோலியின் முதல் கேர்ள் ஃப்ரண்ட்”.. “எனக்கும் சிம்புக்கும் கல்யாணம்”.. டிவி நிகழ்ச்சியில் BIGG BOSS நடிகைகள் சொன்ன சுவாரஸ்யம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சேனலாக தமிழகத்தில் பிரபலமான சேனல் விஜய் டிவி. தொடக்க காலத்தில் விஜய் டிவி என்கிற பெயரிலும் பிற்காலத்தில் ஸ்டார் விஜய் என்கிற பெயரிலும் வளர்ச்சி அடைந்த விஜய் டிவி, பின்னர் திரைப்படங்கள் மற்றும் த்ரோபேக் நிகழ்ச்சிகளுக்காக விஜய் சூப்பர், பாடல்களுக்காக விஜய் மியூசிக் ஆகிய உப சேனல்களை தொடங்கியது.
![bigg boss Aishwarya Dutta Sakshi Agarwal Anitha Sampath vijay tv bigg boss Aishwarya Dutta Sakshi Agarwal Anitha Sampath vijay tv](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/bigg-boss-aishwarya-dutta-sakshi-agarwal-anitha-sampath-vijay-tv.jpeg)
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், காமெடி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பெருவாரியான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஓ சொல்றியா ஓஓ சொல்றியா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஓ சொல்றியா .. ஓஓ ஓஓ சொல்றியா நிகழ்ச்சியில் முந்தைய பிக் பாஸ் போட்டியாளர்கள் ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால் மற்றும் அனிதா சம்பத் கலந்து கொண்டனர். சுவாரசியமாகவும் ஜாலியாகவும் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி எடுத்துச் சென்றனர்.
இதில் நீங்கள் இதுவரை கேள்விப்பட்ட மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமான வதந்திகள் என்னென்ன என்று பிரியங்கா கேட்கிறார். இதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா தத்தா, “எனக்கும் சிம்புவுக்கும் திருமணம்” என்ற செய்தி வந்தது என்று கூறினார். இதேபோல் சாக்ஷி அகர்வால், “நான் கிரிக்கெட் வீரர் கோலியின் முதல் கேர்ள் பிரண்ட் என்று வதந்திகள் வந்தன” என்று குறிப்பிட்டார். இதற்கு மாகாபா ஆனந்த், “வதந்தி செய்தியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா” என்பது போல் கலாய்த்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த கலகலப்பான நிகழ்ச்சி ஞாயிறு அன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)