“எல்லாரும் எதிர்க்குறாங்க”.. “அப்ப நானுமா?..”- அசீமிடம் நியாயம் கேட்ட ஏடிகே ..மணிகண்டா கொடுத்த எண்ட் பஞ்ச்..! BIGG BOSS 6
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன்கள் இருந்த நிலையில், சனிக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் வெளியேறுவதாகவும், ஞாயிறு எபிசோடில் ஆயிஷா வெளியேறுவதாகவும் கமல் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து அடுத்த வார நாமினேஷன் ப்ராசஸில், மைனா, அமுதவாணன், விக்ரமன் ஆகியோர் மணிகண்டனை நாமினேட் செய்துள்ளனர். இதேபோல் ரச்சிதா, மணிகண்டா தனலட்சுமி ஆகியோர் விக்ரமனையும், ஏடிகே மற்றும் அசீம் ரச்சிதாவை நாமினேட் செய்துள்ளனர். ஷிவின், கதிரவன், ஏடிகே மற்றும் மணிகண்டா ஆகியோர் அசீமை நாமினேட் செய்துள்ளனர். இதனிடையே இந்த வார கேப்டன்சி டாஸ்கில் மைனா ஜெயித்துள்ளார். இந்நிலையில், அசீமின் பேச்சுகளும் அவருக்கு மற்ற ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த பதில்களும் வைரலாகி வருகின்றன.
ஏற்கனவே அசீம் பற்றி விக்ரமனிடம் பேசியிருந்த ஏடிகே, “அசீம் போலியாக டயலாக் பேசிக்கொண்டு அடுத்தவர்களை அட்டாக் செய்து கொண்டு இருக்கிறான். இவனை மாதிரி ஆளுகளுடன் இந்த வீட்டில் இருப்பதே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. சரி நார்மலாக பேசி விட்டான், நாமளும் நார்மலாக பேசுவோம் என நினைத்தால் அதுவும் ஒரு மணி நேரம்தான் நீடிக்கிறது.
அந்த ஒரு மணி நேரத்துக்குள் நம்மளை ஒரு மாதிரி எமோஷனலாக சிதைத்து விடுகிறான். தனக்கு நண்பர்கள் யாருமே இல்லை என கட்டிப்பிடித்து அழுது விடுகிறான். அதன் பிறகு இவனே வந்து நானெல்லாம் வேற மாதிரி என்று சொல்கிறான். இன்னும் 18 வயதிலேயே இருக்கிறான் போலிருக்கிறது” என கூறியிருந்தார்.
இந்நிலையில் அமுதவாணன் அசீமை ஜாலியாக கிண்டலடித்துக் கொண்டிருந்தார். அதன்படி, கண்ணாடி முன்னாடி நின்னு தனியா டயலாக் பேசும் அசீம்.. இனி நீ பாலைய்யா இல்ல. அசீமே தான்.. அசீம் ஆர்மி வெளில தீயா வேலை செஞ்சிட்டு இருப்பாங்க போல.. என்று சொல்ல, அசீமோ, தன்னைப் பிடிக்காதவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கலாம்.
ஆனால் தன்னை பிடித்த கோடி பேர் வெளில இருக்கிறார்கள் என்பதாக எவ்வளவு தூரம் தன்னை எதிர்க்கறாங்களோ அவ்வளவு தூரம் அவர்கள் வளருவாஎகள் என குறிப்பிட்டு தன்னை வைத்தே அவர்களின் வளர்ச்சி என பேசினார்.
இதற்கு ஏடிகே, வீட்ல இருக்குறவங்க எல்லாம் உன்ன எதிர்த்தாங்களா.. அப்படினா நானுமா? நான் எங்கடா உன்ன எதிர்த்தேன்? என வினவ, அசீமோ, தன்னுடன் எல்லாருமே சண்டை போட முயற்சிப்பதாக குற்றம் சாட்ட, பதிலுக்கு அசீம் தான் அனைவருடனும் போய் சண்டை போட்டதாக சொல்ல, இடையில் மணிகண்டா, “அப்ப அந்த 18 பேரும் கண்டுக்காம போயிருந்தா.. அசிம் கிடையாதுல்ல.. அப்ப கிரெடிட் அவங்களுக்கும்தானே போகனும்” என்று இந்த முத்தரப்பு உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Also Read | நடிகையை கொன்று உடலை ஆற்றில் வீசிய மகன்.. சொத்து தகராறா? பாலிவுட்டை அதிரவைத்த கொடூர சம்பவம்..! VEENA KAPOOR

மற்ற செய்திகள்
