"ஃபினாலேவுல கமல் சார் என் பெயரை அறிவிச்சாரு" - அமுதவாணன் கண்ட கனவு.. "நானும் ஒரு கனவு கண்டேன்" - அழகாய் சொன்ன கமல் 😍
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த டாஸ்க், ஏலியன்ஸ் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கிற்கு அப்படியே நேர் எதிராக அமைந்திருந்தது. சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக இருந்தது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்திருந்தது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும், நடிப்பும் அதிக கவனம் ஈர்த்திருந்தது.
முந்தைய வாரங்களை போல சண்டை அதிகம் இல்லாமல், சற்று கலகலப்பாக தான் இந்த வார டாஸ்க்கும் சென்றிருந்தது. டாஸ்க் முடிவுக்கு வந்த நிலையில், வார இறுதி எபிசோடில் கமல்ஹாசனும் தோன்றி இருந்தார். இந்த வாரம் நடந்த டாஸ்க் குறித்தும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விஷயங்களை உரையாடி இருந்தார் கமல்ஹாசன். அப்படி ஒரு சூழலில், இந்த வாரத்தின் முதல் எலிமினேஷனில் ராம் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.
இந்த நிலையில், சனிக்கிழமை எபிசோடில் அமுதவாணன் தான் கண்ட கனவு பற்றி பேச, இதுகுறித்து கமல்ஹாசனும் பின்னர் பேசிய விஷயம், பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் உட்கார வைத்து விளக்கும் அமுதவாணன், "ADK, எனக்கு ஒரு கனவு வந்தது அதில் நாம் இருவரும் ஃபைனலிஸ்ட் ஆகி கிராண்ட் ஃபினாலேவுக்கு போகிறோம். கமல் சார் விஜய் டிவி வாசலில் என் கையைப் பிடித்துக் கொள்கிறார். முதலில் என் கையை கமல் சார் உயர்த்தி தூக்கியதும் நான் வெற்றி அடைந்து விட்டதாக கருதி காட்டுகிறேன். அப்போது கமல் சார், 'நீங்கள் ரன்னர்' என்று கூறுகிறார். அப்போது யார் வின்னர் என்று கேட்டேன். நீங்கள் ரன்னர் என்றால் ADK தான் வின்னர் என்று கமல் சார் கூறுகிறார். பிறகு என்னை வெளியே அனுப்புகிறார்கள். இது நடந்தது" என்று அமுதவாணன் சிரித்துக் கொண்டே சொல்ல, அதற்கு தனலட்சுமி, 'கனவில் வருவதெல்லாம் நடக்காது அண்ணா. ஏன் கனவு கண்டீர்கள்?' என்று கேட்டு Thug Life கொடுக்கிறார். இப்படி இவர்கள் அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்க ஏடிகேவோ, 'இப்படி எல்லாம் பேசினால் வெளியே அனுப்பி விட போகிறார்கள், அமைதியாக இருங்கள் 'என்று கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து, ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் பேசிய கமல்ஹாசன், அமுதவாணனை குறிப்பிட்டு, "நானும் ஒரு கனவு கண்டேன். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் செக்யூரிட்டி, பிக் பாஸில் எம் ஆர் ராதா கேரக்டர் வேஷமிட்டுருந்த ஒருவரை அழைத்து வந்து இவர் நன்றாக நடித்திருந்தார் என்று சொன்னார். நீங்கள் அருமையாக பண்ணி இருந்தீர்கள். நான் எம் ஆர் ராதா அண்ணனின் ரசிகன்" என்று வாழ்த்தினார். அமுதவாணன் கனவு குறித்து பேசி, அவரது நடிப்பையும் கமல்ஹாசன் பாராட்டி இருந்த விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
