பாக்யா ஜெயிச்சாச்சு!!.. கலவரமான கோபி முகம்.. சிங்கப்பெண்ணே VIBE-ல் தூக்கி கொண்டாடிய மகன்கள்.. BAAKIYALAKSHMI
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு உள்ளது. இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா. பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார்.

பின்னர் மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்த கோபி. ராதிகாவை திருமணம் செய்தும் கொண்டார். இதனால் முன்னதாக தோழிகளாக பழகிய ராதிகாவும் பாக்கியலட்சுமியும் இப்படி கோபியால் நேருக்கு நேராய் மோதும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த திருப்புமுனைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. அத்துடன் கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்துவருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும், தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் பாக்கியலட்சுமி, இருக்கும் அதே வைதேகி நகரில் உள்ள வீட்டுக்கு குடியேறிய கோபி, தன் முன்னாள் மனைவி முன்னாள், தன் இந்நாள் மனைவியுடன் வாழ சபதம் பூண்டுள்ளார். இப்படி போகும் கதையில் தற்போது ராதிகா & பாக்கியலட்சுமி வசித்து வரும் வைதேகி நகர் குடியிருப்பு சங்க நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ராதிகாவை எதிர்த்து பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். ராதிகாவுக்கு ஆதரவாக கோபியும், பாக்யாவுக்கு ஆதரவாக மொத்த குடும்பமும் களமிறங்கினர்.
இதில் தேர்தல் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது, இதில் முன்னரே, பாக்யாதான் ஜெயிப்பார் என பாக்யாவின் மாமனார், ஜெனியிடம் ஆரூடம் கணித்து சொல்லிக்கொண்டிருந்தார். அவரது கணிப்பு படியே பாக்யா ஜெயித்துவிட்டதாக ரிசல்டை, கமிட்டியினர் அறிவிக்க, உடனே கோபியும் ராதிகாவும் அதிர்ந்து போய்விட்டனர். அத்துடன் ஏற்கனவே பாக்கியலட்சுமியை, கணவர் துணையில்லாமல் தனியாக வாழ்வது குறித்து ஏளனமாக பேசிய காலனி செக்ரட்டரியின் முகமும் கலவரமாகிவிட்டது.
இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமியின் இரண்டு மகன்களுமான செழியனும் எழிலும் ஓடிவந்து பாக்யாவை தூக்கிக் கொண்டாடினர். அதை பார்த்து ராதிகாவின் முகம் வாடிப்போக, கோபியோ எரிச்சலும் குழப்பமுமாக நின்றுகொண்டிருந்தார். இதனிடையே பாக்கியலட்சுமிக்கு பலரும் ஓடிவந்து வாழ்த்துக்கள் கூற, பின்னணியில் சிங்கப்பெண்ணே பாடலை ஒலிக்கவிட்டு வெளியான புதிய ப்ரோமோ வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
