VIDEO: "AMBULANCE-ல SPELLING MISTAKE".. "வீரப்பனுக்கு இங்லீஷ் படிக்க தெரியுமானு.?".. அதிரடிப்படை விஜயகுமார் IPS INTERVIEW
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா என நான்கு மாநில எல்லைகளிலும் தேடப்பட்டு வந்த சந்தன கடத்தல் வீரப்பன் எத்தனையோ பல போலிஸ் ஆபரேஷன்களுக்கு பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்.
Also Read | "அட, இந்தாங்க சாவிய புடிங்க".. காரை போட்டோ எடுத்த இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!
இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த K.விஜயகுமார் ஐபிஎஸ் அப்போதைய தனிப்படை தலைவராக இருந்து பொறுப்பேற்று, இதை சாத்தியப்படுத்தினார். இறுதியில் அதிரடிப்படைக்குச் சொந்தமான டெம்போ டிராவலர் முற்றிலும் ஆம்புலன்ஸாக ஆக மாற்றப்பட்டு, ஒரு ரகசிய நபர் மூலமாக விஜயகுமார் , மற்றும் அதிரடிப்படையினர் திட்டமிட்டு, அனைவரையும் கூண்டுடன் பிடித்து, ஆனாலும் சரணடைய மறுத்து அவர்கள் சுட முயற்சிக்க, மீண்டும் அதிரடிப்படையினர் சுட்டனர். அதன் பிறகே சுமார் 15, 20 வருட வழக்கு முடிவுக்கு வந்தது.
மேலும் தமது அனுபவம் குறித்து, “Veerappan: Chasing The Brigand” எனும் புத்தகத்தையும் K.விஜயகுமார் எழுதியுள்ளார்.
இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பேட்டி அளித்த விஜயகுமார் ஐபிஎஸ், வீரப்பனை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸில் இருந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் குறித்து பேசி இருந்தார். அதில், “ஒருவர் வித்தியாசமாக முடி வெட்டி இருந்தால் அதை வைத்து டக்கென அவர் கவனிக்கப்படுவார் என்பது எங்களுக்கும் தெரிந்த விஷயம் தான்.
எனவே நாங்கள் மிகவும் கவனமாகவே இருந்தோம். அப்படி இருந்தும் நேரம் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் அவசரத்தில் ஆம்புலன்ஸ் என்கிற அந்த வார்த்தையில் எழுத்து பிழை இருந்தது. நானும் இது குறித்து வேடிக்கையாகவே எழுதி இருந்தேன். வீரப்பனுக்கு ஆங்கிலம் படிக்க தெரியுமா என்பதெல்லாம் இருக்கிறது என்று எழுதியிருந்தேன். அது வேடிக்கையானதுதான்” என குறிப்பிட்டுள்ளார்.