நோயாளியுடன் அவசரமாக புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ்!.. டேக் ஆஃப் ஆகும் போது கழன்று விழுந்த சக்கரம்!.. உயிரை உறைய வைக்கும் திக் திக் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு நோயாளி, ஒரு மருத்துவர் மற்றும் 2 பணியாளர்கள் உட்பட ஐந்து பேர் இருந்த ஏர் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரிலிருந்து ஹைதராபாத்திற்கு அவசரமாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டுள்ளது.
ஜெட்ஸெர்வ் ஏவியேஷன் இயக்கும் ஏர் ஆம்புலன்ஸ், C-90 Air Craft VT-JIL விமானத்தில், 2 பணியாளர்கள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு நோயாளி உட்பட ஐந்து பேர் விமானத்தில் இருந்தனர். இந்த நிலையில், விமானம் டேக் ஆஃப் ஆகும் போது திடீரென முன் சக்கரம் கழன்று விழுந்துள்ளது. மிகவும் இக்கட்டான அந்த தருணத்தில் தனது சமயோசித சிந்தனையாலும், சாதுர்யத்தாலும் அந்த விமானத்தின் கேப்டன் கேசரி சிங் மும்பை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கினார்.
அதைத் தொடர்ந்து, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை 27 இல் விமானம் தீ பிடிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் அனைத்து விமானங்கள் வரும் மற்றும் புறப்படும் நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெட்ஸெர்வ் ஆம்புலன்ஸ் விமானம் நோயாளியுடன் நாக்பூரிலிருந்து புறப்பட்டது. ஆனால் அதன் முன் சக்கரம் கழன்று விழுந்தது. உடனடியாக கேப்டன் கேசரி சிங் தனது உறுதியான மனதுடன், சாதுர்யமாக விமானத்தை மும்பையில் தரையிறக்கினார். விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து டி.ஜி.சி.ஏ, மும்பை விமான நிலையம் மற்றும் பிறரின் முயற்சிகளைப் பாராட்டியது.
Full Emergency declared for a non-scheduled Nagpur to Hyderabad flight. The flight was diverted to Mumbai. Details awaited.
— ANI (@ANI) May 6, 2021

மற்ற செய்திகள்
