சீக்கிரமா அவருக்கு சிறுநீரகத்தை கொண்டு போய் சேர்த்திடணுமே...! ‘ரொம்ப நேரம் ஆக கூடாது...’ ‘ஆம்புலன்ஸை ஸ்பீடுல தெறிக்க விட்ட டிரைவர், கடையில...’ - உச்சக்கட்ட பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உயிரிழந்தவரின் சிறுநீரகத்தை எடுத்துக்கொண்டு மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜெட் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுநருக்கு பாராட்டுகள் வெகுவாக குவிந்து வருகிறது.
மதுரையை சேர்ந்த வேல்முருகன் (27) என்பவர் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் விருப்பத்துடன் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வெங்கடேஷிற்கு வேல்முருகனின் சிறுநீரகத்தை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதனையடுத்து மதுரையிலிருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் சிறுநீரகம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் போக்குவரத்தை நெரிசல் ஆகாமல் சீரமைத்துக் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள குறுகலான சாலையில் ஆம்புலன்ஸ் வேகமாக வந்து சேர முடியாது என்பதால் ஆம்புலன்ஸில் இருந்த சிறுநீரகம் கார் மூலம் மருத்துவமனைக்கு அதிவேகமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறுநீரகம் வெங்கடேஷுக்கு பொருத்தப்பட்டது. மிக கச்சிதமான நேரத்தில் விரைவாக ஆம்புலன்ஸை ஒட்டிய ஓட்டுனரை அனைவரும் பாராட்டினர்.