'வீரப்பன் வாழ்ந்த இடத்தில் உள்ள புதையலில் என்ன இருக்கு'?... வீரப்பன் மகள் பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீரப்பன் வாழ்ந்த இடத்தில் பெரிய புதையல் இருப்பதாக அவரது மகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழக, கர்நாடக அரசுக்கு பெரும் சவாலாக விளங்கிய வீரப்பனைக் கடந்த 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படை சுட்டுக் கொன்றது. வீரப்பனுக்குத் திருமணமாகி வித்யாராணி, விஜயலட்சுமி என்ற 2 மகள்கள் உள்ளனர். வித்யாராணி பா.ஜனதாவில் இணைந்த நிலையில் விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். அத்துடன் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, ''மாவீரன் பிள்ளை படம் சாதிய படமாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க சமூகப் பிரச்சினைகளை எடுத்துக்கூறும் படம். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, மதுவிலக்கு, விவசாயிகளின் போராட்டங்கள் போன்றவற்றைப் படத்தில் கூறியுள்ளோம்.
அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் மட்டுமே அவரது படத்தைப் போலவே போஸ்டரில் எனது படம் பயன்படுத்தப்பட்டது. அவரின் வாழ்க்கை கதைக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது தந்தை வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் ''பணப் புதையல்'' இருப்பது உண்மை.
அது உயிரிழந்த எனது அப்பாவிற்கும் அப்பாவின் நெருங்கிய நண்பரான கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும். இருவருமே இப்போது உயிரோடு இல்லை. ஆனால் நிச்சயம் புதையல் அங்கே இருக்கிறது.'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
