“என் வீட்ட சேர்ந்தவங்க இருந்தா எப்படி இருக்குமோ.. அப்படிதான் இருந்துச்சு!”.. ஆம்புலன்ஸ் வந்ததும் டிராஃபிக் காவலரின் ‘சல்யூட் அடிக்க வைத்த செயல்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாஐதராபாத்தின் அபிட்ஸ் சாலையில் இருந்து கோட்டி சாலை வரை ஏறத்தாழ 2 கி.மீ தூரம், டிராபிக் போலீஸ் ஒருவர் நெரிசல் மிகுந்த சாலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவகுக்க ஓடி சென்ற சம்பவம் வைரலாக நெட்டில் பரவியது.

கடந்த திங்கள் (02-11-2020) அன்று அபிட்ஸ் ஜிபிஓ சிக்னல் அருகே நெரிசலான நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தபோது டிராபிக் போலீஸ் பாப்ஜி, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன்னே 2 கி.மீ ஓடி, வாகன நெரிசலை சரிசெய்து, வழிவகுத்து கொடுத்தார்.
ஆம்புலன்சில் பயணித்த யாரோ ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர். ஜிபிஓ சிக்னல் பகுதியில் இருந்து, ஆம்புலன்ஸ் முன்னே ஓடி, வழிவிடாத வாகன ஓட்டிகளை ஓரம் போக சொல்லி கொண்டே, ஓடிய பாப்ஜியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அம்புலன்சுக்கு வழி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தம் மனதில் இருந்ததாகவும், தனது செயலுக்கு கிடைத்த பாராட்டுகள் நிறைவாக இருப்பதாகவும், தன் வீட்டை சேர்ந்தவர்கள் அந்த ஆம்புலன்சில் இருந்தால், எப்படி இருக்குமோ, அப்படியே நான் உணர்ந்ததாகவும் பாப்ஜி கூறி இருந்தார்.
HTP officer Babji of Abids Traffic PS clearing the way for ambulance..Well done..HTP in the service of citizens..👍👍@HYDTP pic.twitter.com/vFynLl7VVK
— Anil Kumar IPS (@AddlCPTrHyd) November 4, 2020
இதுபற்றி ஐதராபாத் கூடுதல் கமிஷனர் அணில் குமார் பாராட்டி ட்வீட் போட்டிருக்கிறார். பல்வேறு சீனியர் காவல் அதிகாரிகளும் பாப்ஜிக்கு தங்களது பாராட்டுகளை வழங்கி வருகின்றனர். அத்துடன் பாப்ஜிக்கு ஐதராபாத் காவல் துறை நேரில் பாராட்டுகளை தெரிவித்து கௌரவித்துள்ளது.

மற்ற செய்திகள்
