'39 தடவ' ஆம்புலன்ஸ் 'புக்' செய்த நபர்...! அப்படி 'எங்க' தான் போறாருன்னு 'சிசிடிவி' செக் பண்ணினப்போ... - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > உலகம்உயிருக்கு ஆபத்தான காலங்களில் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவையை முதியவர் ஒருவர் தவறாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து நாடுகளிலும் ஆம்புலன்ஸ் உயிர்காக்கும் வாகனமாக செயல்பட்டு வருகிறது. எந்த நெரிசலான சாலையில் ஆம்புலன்ஸ் வந்தாலும் வாகன ஓட்டிகள் அதற்கு வழிவிட்டாக வேண்டும், இல்லையேல் தண்டனை அனுபவிக்கும் அளவிற்கு குற்றம் செய்ததாக பல நாடுகளில் கருதப்படும்.
அதோடு, உயிர்காக்கும் அவசர உதவிக்காக மட்டும் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவையை தேவையில்லாமல் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இதனால் மற்றவர்களுக்கு அசெளகரியம் ஏற்படும்.
இந்நிலையில், தைவான் நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் காய்கறி, மளிகைக் கடைக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய சம்பவம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஒரு மருத்துவமனை சமீபத்தில் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அந்த முதியவர் இந்த ஆண்டு மட்டும் சுமார் 39 முறை ஆம்புலன்ஸ் புக் செய்து பயணம் செய்துள்ளார்.
இவர் ஆம்புலன்ஸ் புக்கிங் செய்த தேதிகளை வைத்து மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பார்த்த போது இவர் அத்தனை முறையும் அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை செய்தபோது அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் இனிமேல் இது போல செய்தால் தண்டனை வழங்கப்படும் என முதியவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

மற்ற செய்திகள்
