ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லும் போது ‘ஆம்புலன்ஸுக்கு’ தீ வைத்த ரவுடி.. போலீஸ் ஸ்டேஷன் முன் நடந்த பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது ஆம்புலன்ஸுக்கு ரவுடி ஒருவர் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் பிரகாஷம் மாவட்டம் ஓங்கோல் பகுதி காவல் நிலையத்துக்கு கடந்த சில நாட்களாக சுரேஷ் என்ற ரவுடி காவல் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து அடிக்கடி தொல்லை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து அதிகாலை வேளையில் காவல் நிலையத்துக்கு வந்த சுரேஷ் தன்னை கைது செய்யுமாறு தொல்லை செய்துள்ளார். இதனால் அவரை அங்கிருந்து போகும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது காவல் நிலையத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து கையை கிழித்து சுரேஷ் காயத்தை ஏற்படுத்தியுள்ளார். உடனே அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது ஆம்புலன்ஸுக்கு உள்ளே இருந்த காட்டன் துணியில் தீ வைத்துவிட்டு ‘சந்தோஷமாக சாவேன்’ என சுரேஷ் கூறியுள்ளார்.
தீ மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்ததும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளனர். விரைந்து வந்த போலீசார் சுரேஷை மீட்டு இரு சக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
