வண்டி ஒட்டுறவங்க இதெல்லாம் செஞ்சா 10 ஆயிரம் ருபாய் FINE.. தமிழக அரசு அதிரடி.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Oct 20, 2022 03:37 PM

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

10000 Rs fine for not giving way to ambulance says TN government

Also Read | பாம்பன் பாலம் : 10 நாளுல 2வது தடவ.. நேருக்கு நேரா வந்த பேருந்துகள்.. அடுத்த செகண்டுல நடந்த துயரம்..!

இந்தியாவில் போக்குவரத்தின் தேவை எப்போதுமே மிக அதிகம். மக்களின் தேவைகளுக்காக பொது போக்குவரத்து சேவைகளை அரசுகள் மேம்படுத்தி வருகின்றன. இதனிடையே பொதுமக்களிடையே தனியாக வாகனங்கள் வாங்கும் ஆர்வமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் சாலை விபத்துகளை தடுக்க ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

10000 Rs fine for not giving way to ambulance says TN government

அந்த வகையில் தமிழக அரசு போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அரசாரணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர் மட்டும் அல்லது அவருடன் பயணிப்பவருக்கும் அபராதம் விதிப்பது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாதவர்களுக்கு, அதிக அளவில் ஒலிமாசுபாடு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், அளவுக்கு மீறி சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு அபராதம் விதிப்பது குறித்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10000 Rs fine for not giving way to ambulance says TN government

அதேபோல, மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டிச் செல்பவருக்கு அபராதம் விதிக்கப்படுவதை போலவே, அவருடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மற்றும் அவருடன் பயணிப்போர் ஆகியோருக்கும் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல், பதிவு செய்யப்படாத வாகனங்களை இயக்கினால் இதுவரையில் 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் அது 5000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன பந்தயங்களில் ஈடுபடுவோர் மற்றும் அபாயகரமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு 2000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | கடற்கரையில் நடந்துட்டு போயிட்டு இருந்தப்போ.. நீரில் பெண் பார்த்த உருவம்.. "டைனோசர் தல மாதிரியே இருக்குற உருவமா அது??".. மர்மம்!!

Tags : #TN GOVERNMENT #AMBULANCE #ஆம்புலன்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 10000 Rs fine for not giving way to ambulance says TN government | Tamil Nadu News.