‘நீங்கதான் பிரதர்’... ‘நடராஜனுக்கு கோப்பையை கொடுத்த கையோடு’... ‘ஹர்திக் பாண்ட்யா சொன்ன வார்த்தை’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 08, 2020 09:18 PM

இந்திய அணியில் சிறப்பாக ஆடிய தமிழக வீரர் நடராஜனை மூத்த வீரர் ஹர்திக் பாண்ட்யா புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

T Natarajan deserve the Man of the Series from my side bhai: Pandya

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ள தமிழக வீரர் நடராஜன் இந்த தொடர் முழுக்க சிறப்பாக பவுலிங் செய்தார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், 2-வது நடந்த டி 20 போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

இன்று நடந்த போட்டியிலும் இக்கட்டான சூழ்நிலையில் வெறும் 33 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதோடு இவர் ஒரு விக்கெட் எடுத்தார். மேத்யூ வேட் விக்கெட்டிற்கு கோலி டிஆர்எஸ் கேட்டு இருந்தால் நடராஜன் இன்னொரு விக்கெட்டும் எடுத்து இருப்பார்.

இந்த தொடரில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்ட்யாவிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த விருதை ஹர்திக் பாண்ட்யா தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்தார். அவர்தான் விருதுக்கு தகுதியானவர், அவருக்குதான் விருது கிடைக்க வேண்டும் என்று கூறி நடராஜனுக்கு பாண்ட்யா கோப்பையை கொடுத்தார்.

பின்னர் இது தொடர்பாக டிவிட் செய்துள்ள பாண்ட்யா, ‘என்னை பொறுத்தவரையில் நடராஜன் பிரதர்.. நீங்கள் இந்த தொடரில் சிறப்பாக ஆடினீர்கள். அறிமுக தொடரிலேயே இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக நீங்கள் ஆடியதன் மூலம் உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பு நிரூபணம் ஆகிறது. இந்த தொடர் நாயகன் விருதுக்கு நீங்கள்தான் தகுதியானவர். இந்த தொடரை வென்ற இந்திய அணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்’ என்று ஹர்திக் பாண்ட்யா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியில் நடராஜனை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா ஊக்குவித்து பேசி வருகிறார். களத்திலும், களத்திற்கு வெளியிலும் இவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் நடராஜனின் திறமையை பாராட்டி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். நன்றாக ஆடுங்கள் என்று அறிவுரை வழங்கி வருகிறார். நடராஜன்தான் ஆட்டநாயகன் ஆக வேண்டும். அவரின் எளிமை எனக்கு பிடித்து இருக்கிறது என்று ஹர்திக் பாண்ட்யா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. T Natarajan deserve the Man of the Series from my side bhai: Pandya | Sports News.