என்ன ஏசிக்குள்ள இருந்து ‘சத்தம்’ வந்துட்டே இருக்கு..! திறந்து பார்த்து ‘வெலவெலத்து’ போன கடைக்காரர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் செல்போன் கடை ஒன்றின் ஏ.சி இயந்திரத்துக்குள் நல்லபாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது கடையின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் ஏ.சி இயந்திரத்துக்குள் இருந்து ‘உஷ்.. உஷ்’ என சத்தம் வந்துள்ளது. உடனே ஏ.சி இயந்திரத்தை பார்த்தபோது, அதற்குள் நல்லபாம்பு ஒன்று இருப்பதை கண்டு ரஞ்சித் குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் ஏ.சி இயந்திரத்தை கழட்டி உள்ளே பார்த்தபோது, சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இருந்தது. அதை லாவகமாக பிடித்த வனத்துறையினர் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
சுவரில் உள்ள துளை வழியாக நல்லபாம்பு வந்ததா?, அல்லது கடையில் ரஞ்சித் குமார் கவனிக்காத நேரத்தில் முன்புறம் வழியாக கடைக்குள் நுழைந்து ஏ.சி இயந்திரத்துக்குள் புகுந்ததா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
