'கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக'.. ஹோட்டல் ஊழியர்களாக மாறி ‘கோடீஸ்வர கணவரும் நடிகையும்’.. செய்த மோசடி அம்பலம்! அடுத்த நடந்த ‘அதிரவைக்கும் சம்பவம்!’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sivasankar K | Jan 28, 2021 05:18 PM

கனடாவில் தடுப்பூசியை முன்கூட்டியே பெறுவதற்காக கோடீஸ்வர தம்பதியர் மோசடியில் ஈடுபட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Millionaire and actress pretended motel worker for covid19 vaccine

இதனை அடுத்து அந்த தம்பதி மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கனடாவின் வான்கூவர் என்னும் இடத்தில் வாழும் கோடீஸ்வரரான Rodney Baker என்பவரும் அவருடைய மனைவியும் பிரபல திரைப்படங்களில் நடித்த நடிகையுமான  Ekaterina Baker ஆகிய இருவரும் தனி விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து பூர்வ குடியினர் வாழும் பகுதியான Yukon என்ற இடத்துக்கு சென்றனர்.

அங்கு தங்களை ஹோட்டல் பணியாளர்கள் போல் இருவரும் காட்டிக்கொண்டு தடுப்பூசியை பெற்றுள்ளனர். கனடாவில் மிகத்தொலைவில் மக்கள் வாழக்கூடிய பகுதி மற்றும் முதியோர்கள் அதிகம் வாழக்கூடிய சமூகத்தினரை கொண்ட பகுதிதான் Yukon. இங்குதான் பூர்வ குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த பகுதியில் இவர்களால் எளிதில் மருத்துவ சேவையை பெற இயலாது என்பதால், இங்கு பூர்வகுடியினருக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ALSO READ: 'என்ன ஒரு ஆனந்தம்.. அந்த கரடிக்கு..!!'.. ‘வீட்டுக்குள் புகுந்து செய்த சேட்டை’.. ‘இணையத்தில் வைரலாகும் வீடியோ!’

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தம்பதியினர் இருவர் மீதும் Yukon-இன் அவசர நடவடிக்கைகள் சட்டத்தின்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 1000 டாலர் வரை அபராத கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே இன்னொரு அதிரவைக்கும் சம்பவமாக, பிரபல நிறுவனங்களில் பெரும் பொறுப்பில் இருந்த  Rodney Baker தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Millionaire and actress pretended motel worker for covid19 vaccine | World News.