'என்னங்க, வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு'... 'மருத்துவமனைக்கு விரைந்த தம்பதி'... 'அங்க இப்படி ஒரு ஆச்சரியமா'?... குதூகலத்தில் இளம் தம்பதி!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரசவ வலியில் துடித்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு நடந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு செர்புளச்சேரி சளவற பகுதியை சேர்ந்தவர் முஹமது முஸ்தபா. இவரது மனைவி முபீனா. இந்த இளம்தம்பதி முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
பெரிந்தல்மண்ணா மவுலானா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் அப்துல் வஹாப் தலைமையிலான டாக்டர் குழு கடந்த 16ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் 4 குழந்தைகளையும் வெளியே எடுத்தனர். 4ம் ஆண் குழந்தைகள்.
முபீனாவுக்கு கர்ப்பத்தின் தொடக்கத்தில் 4 குழந்தைகள் உருவாகி இருப்பதாக மருத்துவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த ஜோடி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின்னர், இறுதியில் பெரிந்தல்மண்ணா மவுலானா மருத்துவமனைக்கு வந்தது.
குழந்தைகள் 1,100 கிராம் முதல் 1,600 கிராம் வரை உள்ளனர். குழந்தைகளுக்கு அயான் ஆதம், ஆஸன் ஆதம், ஐசின் ஆதம் மற்றும் அஸ்வின் ஆதம் என்று பெயரிட விரும்புவதாக முஹமது முஸ்தபா மற்றும் முபீனா தெரிவித்தனர்.பிரசவ வலியில் துடித்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு நடந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு செர்புளச்சேரி சளவற பகுதியை சேர்ந்தவர் முஹமது முஸ்தபா. இவரது மனைவி முபீனா. இந்த இளம்தம்பதி முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
பெரிந்தல்மண்ணா மவுலானா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் அப்துல் வஹாப் தலைமையிலான டாக்டர் குழு கடந்த 16ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் 4 குழந்தைகளையும் வெளியே எடுத்தனர். 4ம் ஆண் குழந்தைகள்.
முபீனாவுக்கு கர்ப்பத்தின் தொடக்கத்தில் 4 குழந்தைகள் உருவாகி இருப்பதாக மருத்துவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த ஜோடி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின்னர், இறுதியில் பெரிந்தல்மண்ணா மவுலானா மருத்துவமனைக்கு வந்தது.
குழந்தைகள் 1,100 கிராம் முதல் 1,600 கிராம் வரை உள்ளனர். குழந்தைகளுக்கு அயான் ஆதம், ஆஸன் ஆதம், ஐசின் ஆதம் மற்றும் அஸ்வின் ஆதம் என்று பெயரிட விரும்புவதாக முஹமது முஸ்தபா மற்றும் முபீனா தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்