அன்பே...! 'இது என் வேலன்டைன்ஸ் டே கிப்ட்...' 'வீட்டுல நகைப்பெட்டிய திறந்து பார்த்த மனைவி ஷாக்...' 'காதலி பார்த்த வேலையால...' - வசமா மனைவிக்கிட்ட சிக்கிய கணவன்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 14, 2021 06:38 PM

ஃப்ளோரிடாவை சேர்ந்த நபர் தன் மனைவியின் நிச்சயதார்த்த மற்றும் கல்யாண மோதிரத்தை திருடி தன்னுடைய காதலிக்கு காதல் பரிசாக வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Florida man wife ring his girlfriend as a love gift

ஃப்ளோரிடா மகாணத்தை சேர்ந்த 48 வயதான ஜோசப் டேவிஸ் என்னும் நபர் தன் காதலியின் நிச்சயதார்த்த மற்றும் கல்யாண மோதிரத்தை திருடியதால் கடந்த வியாழக்கிழமை (11-02-2021) மோசடி வழக்கிற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடியாதோடு மட்டுமல்லாமல் அந்த மோதிரம் மற்றும் திருமண பேன்டை தன்னுடைய கள்ளக்காதலிக்கு காதலர் தின பரிசாக கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஜோசப்பின் தற்போதைய காதலி அவர் கொடுத்த மோதிரத்தின் போட்டோவை முகநூலிலும் போட்டுள்ளார். இதனைப் பார்த்த ஜோசப்பின் மனைவி வீட்டில் இருக்கும் தன் நகைப்பெட்டியை திறந்துப் பார்க்கும் போது நிச்சயதார்த்த மோதிரம், திருமண பேன்ட் உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போயுள்ளது.

மனைவியுடைய நகைகள் மட்டுமல்லாமல் மனைவியின் பாட்டியுடைய வைர மோதிரம் நகைகள் உள்ளிட்ட  சுமார், 6,270 டாலர் மதிப்பிலான பொருட்களை சுருட்டிக்கொண்டு தன் கள்ளக்காதலியிடம் ஒப்படைத்துள்ளார் ஜோசப்.

மனைவி கொடுத்த புகாரின் பெயரில் ஜோசப்பை கைது செய்து காவலர்கள் சிறையில் அடைத்தனர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Florida man wife ring his girlfriend as a love gift | World News.