'அதெப்படிங்க காட்சி வைக்கலாம்?'.. 'கொதிக்கும் கட்சி'.. தியேட்டரில் ருத்திராட்சம் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 24, 2019 09:36 PM

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படம் பிகில்.

Hindu Makkal Party cadres protest against vijays Bigil

இப்படத்தில் விஜய் காவி வேட்டி கட்டிக்கொண்டும், அதே சமயம் கழுத்தில் சிலுவை அணிந்துகொண்டு நடிப்பதால், மதத்தை இழிவுபடுத்துவதாகக் கருதுவதாக இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிகில் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் ருத்திராட்சம் விநியோகிக்கப்பட அக்கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி பேசிய இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளர்,  இந்து மதத்தை புண்படுத்தும்படியாக இந்த காட்சிகள் இருப்பதால் இந்த காட்சிகளை எதிர்க்கும் விதத்தில் தியேட்டர்களில் ருத்திராட்சம் விநியோகிக்கப்பட இருப்பதாகக் கூறியுள்ளார்.

Tags : #VIJAY #BIGIL #THEATRE #IMK