WATCH VIDEO: நீயே 'வெட்கப்படல'.. சமுதாயத்தில் 'தாக்கத்தை' ஏற்படுத்திய பிகில்.. செம வைரல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Nov 02, 2019 07:00 PM
விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான பிகில் திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

Real Victory of #Bigil 🙏 @actorvijay@Atlee_dir @archanakalpathi @dop_gkvishnu @AntonyLRuben @arrahman @Lyricist_Vivek @Jagadishbliss @Actress_Indhuja @am_kathir @Reba_Monica @VarshaBollamma
— Online Thalapathy Fans Club (@OTFC_Off) November 1, 2019
படத்தில் அனிதாவாக வரும், நடிகை ரெபா மோனிகா ஜானுக்கு முகத்தில் ஆசிட் வீசப்பட்டு அவரது ஒரு பக்க முகம் காயமடைந்த நிலையில் வீட்டிற்குள்ளாகவே முடங்கியிருப்பார். அவரைப் பார்த்து கால்பந்து விளையாட அழைக்கச் செல்லும், அவரிடம் திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் முகம் தேவையில்லை என்று விஜய் டயலாக் பேசுவார்.
இந்த டயலாக்கை அனிதா, அவரது மீது ஆசிட் வீசிய ஒரு தலைக்காதலனிடம் கூறுவார். இந்த டயலாக்கை சிகிச்சை பெற்றுவரும் பெண் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இதுதான் உண்மையான வெற்றி என்று புகழ்ந்து வருகின்றனர்.
