வைகை எக்ஸ்பிரஸ் சென்ற தண்டவாளத்தில் கிடந்த ‘பாறைகள்’.. சட்டென ‘சுதாரித்த’ ஓட்டுநர்.. அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக கொடைக்கானல்ரோடு அம்பாத்துரை இடையே செல்லும் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்துள்ளன.
இந்தநிலையில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று காலை அந்த வழியாக வந்துள்ளது. அப்போது தண்டவாளத்தில் பெரிய பாறைகள் கிடப்பதை ஓட்டுநர் பார்த்துள்ளார். உடனே ரயிலை நிறுத்திவிட்டு ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், ரயில் பயணிகளுடன் இணைந்து ராட்சத பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 1 மணிநேரம் தாமதமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ஓட்டுநர் சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.