'செல்போனுடன் கழிவறை பக்கம் போன டிக்கெட் பரிசோதகர்'.. 'திடீரென கேட்ட இளம் பெண்ணின் அலறல் சத்தம்'!.. ஓடும் ரயிலில் 'பரபரப்பு' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓடும் ரயிலில் கழிவறைக்கு சென்ற கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

கோவையில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும், 22 வயது இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு, தான் வசிக்கும் சென்னை கொளத்தூருக்கு கோவையில் இருந்து அதிவிரைவு ரயிலில் வந்து கொண்டிருந்தார். இதனிடையே அதிகாலையில் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தை வந்த போது மாணவி கழிவறைக்கு சென்றதாகவும், அந்த சமயத்தில் கழிவறையின் வெளியே நின்ற டிக்கெட் பரிசோதகர் மாணவியை செல்போனில் ஆபாசமாக படம் பிடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் டிக்கெட் பரிசோதகரை கவனித்துவிட்ட மாணவி அலறி கூச்சலிட்டதால், சக பயணிகள் டிக்கெட் பரிசோதகரின் செல்போனை பறித்து பரிசோதனை செய்தபோதுபோது, அவர் மாணவியை படம் பிடிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து மாணவி ரயில்வே ஹெல்ப் லைனில் தெரிவித்த புகாரை அடுத்து, டிக்கெட் பரிசோதகரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கைதான டிக்கெட் பரிசோதகர் சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பது தெரியவந்ததை அடுத்து அரக்கோணம் ரயில்வே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். கைதான மேகநாதன் வேலூர் மத்திய சிறையில் மேகநாதன் அடைக்கப்பட்டார்.

மற்ற செய்திகள்
