'கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருக்குன்னு ஜிம்க்கு போன மனைவி'... 'இடியாய் நடந்த சம்பவம்'... கலங்கி நிற்கும் காதல் கணவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க் கட்டியைக் கரைக்க உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற மனைவி இப்படி ஒரு முடிவை எடுப்பார் எனக் கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார் அந்த காதல் கணவர்.

மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்துவருபவர் ராஜேஷ். 26 வயதான இவர் மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கனிமொழி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கனிமொழிக்குக் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டியைக் குறைப்பதற்காகக் கனிமொழி உடற்பயிற்சி கூடத்தை நாடியுள்ளார். அப்போது மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் கனிமொழி சேர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அந்த நேரத்தில் யோகேஷ் கண்ணாவிற்கும், கனிமொழிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் நெருக்கமான பழக்கமாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கணவன் ராஜேஸிற்கு தெரியவர, அவர் இதெல்லாம் சரிவராது யோகேஷ் கண்ணாவுடனான பழக்கத்தைக் கைவிடுமாறு கண்டித்துள்ளார்.
இதற்கிடையே யோகேஸிற்கு இதுகுறித்து தெரியவர ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்கள் உதவியுடன் கனிமொழியை அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. இதை அறிந்து உடைந்து போன ராஜேஷ், காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “யோகேஷ் கண்ணா தன்னை தொடர்புகொண்டு, என் மனைவியைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் மிரட்டுகிறார். என் மனைவியை மீட்டுத்தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி வினோதினி, ராஜேஷ், அவரது மனைவி கனிமொழி, மற்றும் உடற்பயிற்சி கூட உரிமையாளர் யோகேஷ் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மற்ற செய்திகள்
