இது அவங்க ‘வாழ்க்கை’ சம்பந்தப்பட்டது.. ‘அரியர்’ மாணவர்களுக்காக ஆர்பாட்டத்தில் இறங்கிய இளைஞர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியர் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்காமல் தேர்ச்சி முடிவுகளை வழங்க வேண்டும் என இளைஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு கலை-அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்குப் புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதுகுறித்து தெரிவித்த தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சியை சேர்ந்த இளைஞர்கள், தமிழக அரசு அறிவித்த தேர்ச்சி என்ற முடிவை வேண்டுமென்றே ஒரு சிலர் எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளதால், அரியர் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. அரசு உடனடியாக தேர்ச்சி முடிவுகளை வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்ற செய்திகள்
