'ஆத்தி... என்ன டா ரொம்ப பயமுறுத்துறீங்க'!.. மயானம் அருகே எடுக்கப்பட்ட புகைப்படத்தில்... அடையாளம் தெரியாத உருவம்... பீதியில் கிராம மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி என்ற கிராமத்தில் பேய் நடமாடுவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் மத்திய அரசின் 100 நாள்வேலை திட்டத்தில் பெண்கள் அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் வேலை செய்தனர்.
இந்த பணிக்கு பொறுப்பாளராக இருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மனைவி ராஜேஷ்வரி, வேலைசெய்வதற்கு முன்பும், வேலை செய்து முடித்த பின்பும், செல்போனில் படம் எடுப்பது வழக்கம். உயரதிகாரிகளுக்கு அனுப்பு வழக்கம்.
அதேபோல் இரு நாட்களுக்கு முன்னர், வேலைசெய்வதற்கு முன்பு செடிகொடிகளுடன் உள்ள இடத்தையும், சுத்தம் செய்தபின்பு உள்ள இடத்தையும் செல்போனில் படம் எடுத்துள்ளார்.
பின்னர், இரவு அந்த படங்களை ஒவ்வொன்றாக பார்த்தபோது ஒரு படத்தில் சுடுகாட்டு கரையில் கருப்பு உருவம் பதிவானது கண்டு அதிர்ச்சியடைந்தார். புகைப்படத்தை சற்று பெரியதாக்கி பார்த்தபோது, அந்த உருவம் கருப்பாக தென்பட்டது.
உடனே அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் காண்பித்தபோது பிசாசு என்று ராஜேஷ்வரியை பயமுறுத்தியுள்ளனர். பிறகு, எல்லோரும் அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பரப்ப இப்போது, இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தற்போது, கச்கைச்கட்டி கிராம மக்கள் மயானம் அமைந்துள்ள பகுதிக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர். அதே வேளையில், புகைப்படத்தை ஆய்வு செய்து உண்மைத்தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டுமென்று கச்சைகட்டி கிராம இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.